NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அக்குரஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் ஜெயந்தி பாலத்திற்கு அருகில் உள்ள வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால், தெற்கு அதிவேக வீதியின் பாலட்டுவ வெளியில் இருந்து மாத்தறை நோக்கி இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாத்தறை நோக்கி பயணிக்க விரும்பினால், கபுதுவ வெளியேறும் வாயிலில் இருந்து வெளியேறி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கபுதுவ நுழைவு வாயிலில் நுழைந்து கொடகம வெளியேறும் வாயிலில் இருந்து வெளியேறி மாத்தறை நோக்கி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles