தெற்கு காசாவில் மனிதாபிமான உதவிக் குழுக்கள் உள் நுழைவதற்கு அனுமதி வழங்கியே இந்த போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் மட்டுமே போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்குமென இஸ்ரேல் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேலிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பாலஸ்தீனத்திற்கு எதிராக தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை பதவி விலகுமாறும் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.