நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.
உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் ஏற்பட்ட வரட்சி காரணமாக 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல மாகாணங்களில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு அருகில் இருந்த சுமார் நூறு ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளன தாழ்நிலங்களில் பெய்து வரும் மழையினால் மரக்கறிச் செய்கைகளும் அழிந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளர்.