NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் நிலவும் வறட்சியினால் ஒரு இலட்சம் பேர் வரை பாதிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் நிலவும் வறட்சியினால் 9 மாவட்டங்களில் சுமார் 100,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பொது மக்கள் வறட்சியான காலநிலையால் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் 30,862 குடும்பங்களைச் சேர்ந்த 99,594 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles