NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை தற்காலிகமாக மூடப்படும் வீதி

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நாளை (08) தற்காலிகமாக மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியில் அவ்வப்போது மூடப்படும் எனவும் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதியில் உள்ள ஆபத்தான பாறை கற்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காகவே இவ்வாறு வீதி மூடப்படுவதாகும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles