NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சிறுவனுக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சிறுவன் ஒருவன் சர்வதேச விருதொன்றை வென்றுள்ளார்.

14 வயதான கல்யா கந்தேகொட கமகே என்ற சிறுவன் மவுண்ட் பேட்டிங் என்னும் பதக்கத்தை வென்றுள்ளார்.

பொதுநலவாய நாடுகளில் நாடு ஒன்றில் ஓர் ஆண்டில் மேற்கொண்ட மிகச்சிறந்த உயிர் காப்பு வீரதீர செயலுக்கான விசேட அங்கீகாரம் இந்த சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உலகில் இந்த வீர பதக்கத்தை வென்ற மிகவும் இள வயது சிறுவனாக கல்யா கருதப்படுகின்றார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி படகு விளையாடில் ஈடுப்பட்ட போது, அவரது 11 வயது சகோதரர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன் போது சம்பவத்தை அறியாது கரைக்கு நீந்தி வந்த கல்யா, மீண்டும் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் நீந்தி சென்று தனது சகோதரனை மீட்டு தரைக்கு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த வீர செயல் பெரும் அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

56 நாடுகளைக் கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடந்த ஆண்டில் பதிவான மிகச்சிறந்த வீரச் செயலாக இந்த செயல் கருதப்படுகின்றது.

தனது சகோதரனே பாதுகாத்த கல்யாவிற்கு அரச உயிர் காப்பு சங்கத்தின் மவுண்ட் பாட்டின் பதக்கம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles