பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையையொட்டி மிருகங்களைப் பலிகொடுத்த அகமதியா சமூகத்தைச் சேர்ந்த 36 பேரை கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுபான்மை அகமதியாக்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் பக்ரீதில் மிருகங்களைப் பலியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.