கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஓகஸ்ட் மாதத்தில் 4 வீதமாக குறைந்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, கடந்த ஜூலை மாதம் ஒட்டுமொத்த பணவீக்கம் 6.3% ஆக பதிவாகியிருந்தது.
இது 2.3 வீதம் குறைவடைந்து ஓகஸ்டில் 4 வீதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளைஇ உணவுப் பணவீக்கம் ஜூலையில் -1.4 விகிதத்தாலும் ஓகஸ்டில் -4.8 விகிதத்தாலும் குறைந்துள்ளது. அதே சமயம் உணவு அல்லாத பணவீக்கம் ஜூலையில் 10.5% இலிருந்து ஓகஸ்டில் 8.7% ஆகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையின் பணவீக்கம் 76 சதவீதம் வரை உயரந்திருந்த நிலையில் அரசாங்கத்தின் சில இறுக்கமான கொள்கைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக பணவீக்கம் மெல்ல மெல்ல குறைவடைந்தது.
இந்நிலையில், தற்போது ஒட்டுமொத்த பணவீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு குறைவடைந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஓரளவு ஸ்திரத்தன்மை நிலவுமென பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.