இந்தியாவின் கேரளா – கொல்லம் அருகே அளவுக்கு அதிகமாக பரோட்டா சாப்பிட்டு 5 மாடுகள் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும், 09மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்லம் பகுதமியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மாட்டுப்பண்ணை நடத்தி வருகின்றார். இவர் பல காலமாக பால் விநியோகமும் செய்து வருகின்றார்.
வழக்கத்துக்கு மாறாக ஹோட்டல் ஒன்றிலிருந்து மிஞ்சிய பரோட்டாக்களை வாங்கி வந்து மாடுகளுக்கு தீவணமாக கொடுத்துள்ளார்.
இதை சாப்பிட்ட மாடுகள் வயிறு வீங்கி சில மணித்தியாலங்களிலேயே உயிரைவிட்டுள்ளது.
தொடர்ந்து இது குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தார். மாடுகளை பரிசோதித்ததில் உணவு ஜீரணம் ஆகாமல், வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதால் மாடுகள் இறந்தது தெரிய வந்தது.
மேலும் சம்பவம் தொடர்பாக கால்நடை துறை அமைச்சர் சிஞ்சுராணி மற்றும் அதிகாரிகள் உரிய இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகம் பரோட்டோ, பலாப்பழம், சோறு ஆகியவற்றை மாடுகளுக்கு வழங்க வேண்டாம் என வைத்தியர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.