NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானின் வணிக வளாகத்தில் தீ விபத்து 

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் வீதியில்  பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.

இந்த வணிக வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தகவலறிந்த  தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles