(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முற்பட்ட ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்த ஆயத்தமான குறித்த நபர், நீந்துவதில் சிரமத்தை உணர்ந்த நிலையில், மார்பு பகுதியில் வலி எடுப்பதாக குழுவினருக்கு அறிவித்துள்ளார்.
படகிலிருந்த உதவிக்குழுவினர் அவரை மீட்டு வைத்தியரிடம் ஒப்படைத்தனர். எனினும், அவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டை சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.







