NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் குறித்து வதந்தி!

இலங்கையின் பிரபல மூத்த தமிழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் குறித்து சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக உடல்நல குறைவு காரணமாக அப்துல் ஹமீட் காலமானதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இது முற்றிலும் போலியான தகவல் எனவும் அவர் மிகுந்த உடல் நலத்துடன் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles