NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் வெளியானது!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தம், ஆளுநரின் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் வகையிலான 2 மசோதாக்கள் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டன.

அந்த சட்டத்தின் அடிப்படையில், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும், ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும் எனவும், அதுமட்டுமல்லாமல் பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles