NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெரும் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

நில்வல கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

பானதுகம பிரதேசத்தின் நீர்மட்டம் 6.87 மீற்றராக உயர்ந்துள்ளதாகவும், நேற்று இரவு 8 மணியளவில் அதன் அளவு 6.85 மீற்றராக பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது 7.50 மீற்றராக உயர்ந்தால் பெரும் வெள்ள நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில்வல ஆற்றின் பானதுகம மற்றும் தல்கஹகொட பிரதேசங்களில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles