NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதில்களுக்கு இடையில் சிக்கிய மாணவி பாதுகாப்பாக மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

களுத்துறையில் பாடசாலை ஒன்றில் இரண்டு சுவர்களுக்கு இடையில் சுமார் 30 நிமிடங்கள் சிக்கியிருந்த 7 வயதான மாணவியை களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (14) மதியம் நடந்துள்ளதாக களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை கட்டுக்குருந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

பாடசாலையின் கழிவறை மற்றும் மதிலுக்கு இடையில் மாணவி சிக்கி இருந்துள்ளார்.

களுத்துறை மாநகர தீயணைப்பு பிரிவின் அவசர அம்பியூலன்ஸ் வண்டி உடனடியாக பாடசாலைக்கு சென்று, ஸ்பேடர் என்ற நவீன கருவியின் உதவியுடன் இரண்டு சுவர்களைத் தள்ளி மாணவியை காப்பாற்றியதாக களுத்துறை மாநகர சபை தீயணைப்பு பிரிவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles