நாட்டில் அண்மைய காலங்களில் பதிவான சர்ச்சைக்குரிய 6 மரணங்களில் மருந்து ஒவ்வாமை காரணமாக 2 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக மருந்து ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இக் குழுவின் தலைமை உறுப்பினரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர, குழுவின் அறிக்கை குறித்து இங்கு விளக்கமளித்தார்.
மேலும், கண்டி, பேராதனை, கேகாலை, றாகமை, பாணந்துறை மற்றும் தேசிய கண் வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் பதிவான சர்ச்சைக்குரிய மரணங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.