எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோய் (Diabetes) பாதிப்பு குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில் உடல் பருமன், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை ஆகிய இரண்டு காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது.