இரு நாட்களாகக் காணாமல் போயிருந்த யுவதி ஒருவர் நேற்று மாலை வீட்டின் அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாத்தளை – ரத்தோட்டை பகுதியில் 21 வயதுடைய யுவதி ஒருவர், கடந்த 28 ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், அவரை குடும்பத்தினர் தேடிய போது , நேற்று மாலை வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி பெற்றோருடன் முரண்பட்டிருந்த நிலையில் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார் எனவும், அவர் காணாமல்போயிருந்த தகவலைப் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யுவதி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கிப்பதுடன், யுவதியின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.