NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு.

இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டு மலேரியா நோய் பதிவாகியிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு 62 மலேரியா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்.2024 ஆம் ஆண்டு இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியவர்களின் மத்தியிலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.அந்த நோயாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதி காக்கும் கடமைகளுக்குச் சென்ற இராணுவத்தினர் மற்றும் இரத்தினக் கற்கள் வர்த்தகம் செய்யச் சென்றவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles