NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா – அமெரிக்கா இணைந்து இன்று கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டது.

அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானமான பி1-பி விமானமும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்கொரியா – அமெரிக்கா கூட்டு இராணுவ பயிற்சிக்கு பதிலடியாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை தென்கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles