NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முச்சக்கரவண்டியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொட்டாவை – மாகும்புர பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் படுத்திருப்பது தொடர்பில் 119 அவசர இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபர் உயிரிழந்துள்ளமையை உறுதிப்படுத்தினர்.

எனினும், உயிரிழந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles