கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், பெப்ரவரி மாதம் 50.6 சதவீதத்திலிருந்து மார்ச் மாதத்தில் 50.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, 2023இல் பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வேகக்குறைவுப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.
அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 பெப்ரவரி மாதம் 48.8 சதவீதத்திலிருந்து மார்ச் மாதம் 51.7 சதவீதத்திற்கு
அதிகரித்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், மார்ச் மாதம்; 2.92 சதவீதமாகப் பதிவுசெய்யப்பட்டதுடன் இதற்கு, 3.71 சதவீதமாகவிருந்த உணவல்லா வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. எவ்வாறாயினும், உணவு வகை 0.79 சதவீதம் கொண்ட மாதாந்த வீழ்ச்சியினைப் பதிவுசெய்துள்ளது.