முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு 6.1 மில்லியன் ரூபா வெள்ள நிவாரண நிதி உதவியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.