இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், பதில் வரவில்லை என்றால் சட்டத்தை அமல்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரிக்கு மாற்றுவதற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.