(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை தமிழர் வரலாற்றில் இறுதி போரில் உயிர் துறந்த மாவீரர்களை நினைவுக்கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
தமிழின அழிப்பு இடம்பெற்று இன்றுடன் 14 வருடங்கள் நிறைவுறுகின்றன.
இந்நாள் உலகெங்கும் நினைவுக்கூரப்படுகிறது.
இன்றும் திட்டமிட்ட நில அபகரிப்புகளும் தமிழர் மரபுரிமை மையங்களும் தொடர்ந்து பெரும்பான்மை இன மயமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையே தொடர்ந்தும் காணப்படுகிறது.
50,000க்கும் மேற்பட்ட மாவீரர்களையும் பல இலட்சம் அப்பாவிப் பொதுமக்களையும் நாம் இழந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் பற்றி இதுவரை விபரங்கள் எதுவும் அறியாமலே நாட்கள் நகர்கின்றன.
முறையான நீதி விசாரணைகளும் இன்றி காணாமல் ஆக்கப்பட்டோர்களை கண்டறிவதற்கான அலுவலகங்களின் முயற்சிகளின் தோல்வியை மாத்திரமே 14 வருடங்கள் சந்தித்து வர நேர்ந்துள்ளது.
அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ்மக்களின் காணிகள், மரபுரிமைகள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டிருந்தும் முழுமையாக இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.