(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள மோகா புயல் தொடர்பான இறுதி அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மரின் கடற்கரைக்கு அருகே நேற்று பிற்பகல் புயல் கரையை கடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உள்ள மீனவர்கள் இது தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.