அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடந்த நாய் ஒன்றின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் தெஹியத்தகண்டியா பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 21 வயதுடையவர்கள் உயிரிழந்துள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் ஒன்றரை வயது மகன் மேலதி சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.
சடலங்கள் கலேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர