NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் தரமற்ற உணவு விற்பனை-உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த உணவகம் ஒன்றிற்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம், உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது.

குறித்த வழக்கானது மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று (7.6.2024) இடம்பெற்றுள்ளது.

உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஏழாலை சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் முன்னிலையான உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

Share:

Related Articles