NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் வார இறுதி நாட்களில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி தினங்களில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகில் பொலிஸாரின் பிரசன்னத்தை அதிகரிப்பதற்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வார இறுதி தினங்களில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட வேண்டுமென, ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, இன்று (31) யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த தீர்மானத்தின்படி தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் உறுதியளிக்கப்பட்டது.

Share:

Related Articles