எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் பக்தர்களின் நுகர்வுக்காக சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.
அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை ஹஜ் கடமைக்காக 3,500 இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமும் சவுதி அரசாங்கமும் அண்மையில் கையெழுத்திட்டதாகவும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.