அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமொண்டோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கேஸ்பர்ஸ்கை மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது என்றும் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ரஷ்யா நிறுவனமான கேஸ்பர்ஸ்கை கொண்டு அமெரிக்காவின் மிக முக்கிய விபரங்களை சேகரிக்கும் பணிகளில் ரஷ்யா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக ஜினா ரைமொண்டோ குற்றஞ்சாட்டி உள்ளார்.