ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (07) காலை கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அரசியல் செயற்குழு ஒன்று கூடிய போதே, ரோஹித அபேகுணவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளராக நியமிக்கப்பட்டார்.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை மற்றும் அரசியல் செயற்குழு இன்று முற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது.