NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதன் புதிய விலை 3,940 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 70 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,582 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles