NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெறிநாய் அற்ற வலயமாக அநுராதபுரம் பிரகடனம்!

வெறிநாய் அற்ற வலயமாக அநுராதபுரம் மாநகர எல்லையை மாவட்ட மாநகர ஆணையாளர் ருவன் விஜேசிங்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதனால் பொதுமக்கள் தெருநாய்கள் தொடர்பில் பயம் கொள்ளவோ கவலையடையவோ தெவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித நேய மேலாண்மைக்கான கால்நடை மருத்துவர்கள் சங்கமும் இந்த அறிவிப்பை ஆமோதித்துள்ளது.

இதனடிப்படிப்படையில், கடந்த நான்கு வருடங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட வெறிநாய் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் காரணமாக அனுராதபுரம் மாநகர சபை எல்லைக்குள் ரெபிஸ் எனப்படும் வெறிநாய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்டதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வருடந்தோறும் உலக ரெபிஸ் தினத்தின் போது, 90 வீதமான தெருநாய்களுக்கு ரெபிஸ் தடுப்பூசிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய பகுதிகளில் இருந்து விலங்குகளை அநுராதபுர நகருக்குள் கொண்டு வருவது இன்னும் ஒரு பிரச்சினையாக இருப்பதால், விலங்குகளை தனிமைப்படுத்தாமல், ஆதரவற்றவர்களாக விடாமல், பொறுப்புடன் பராமரிக்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொள்கிறார்.

மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிளினிக்குகளுக்கு அப்பகுதி மக்கள் கால்நடைகளை அழைத்து வந்து வெறிநோய் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும் மேலும் கோரப்பட்டுள்ளது.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 7) அதிகாலை 5 மணிமுதல் அப்பிரதேசத்தில் சுற்றித் திரியும் நாய்களுக்கு விஷேட வெறிநோய் தடுப்பு தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles