NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளத்தின் தாக்கம் தொடரும்..

வெள்ளம் படிப்படியாகக் குறைவடைந்தாலும் சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் தொடருமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், களுகங்கையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ள நிலைமையுடன் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களை புனரமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles