NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளத்தில் அடித்துச் சென்ற 30 மில்லியன் பெறுமதியான GPS…!

ஹன்வெல்ல பாலத்தின் கீழ் சிக்கியிருந்த நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான விலையுயர்ந்த நீர் மானி ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த நீர்மானி சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதி என தெரிவிக்கப்படுகிறது.

இது களனி ஆற்றின் நீரின் மட்டம், வேகம் மற்றும் திசை போன்ற தரவுகளை சேகரிப்பதற்காக நீர்ப்பாசன திணைக்களத்தினால் ஹன்வெல்ல பாலத்தின் கீழ் நீர் மேற்பரப்பில் வைக்கப்பட்டுள்ள நீர் அளவீட்டு GPS சாதனமாகும்.

இந்த GPS சாதனம் மூங்கில் புதர்கள் மற்றும் குப்பைகளில் சிக்கி பிரதான கருவியில் இருந்து நழுவி சென்றுள்ளது

இதனையடுத்து, GPS சாதனத்தை கண்டறிய கடற்படையின் உதவி வழங்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, கடும் மழை காரணமாக களனி ஆற்றின் நீர் நிரம்பி வழியும் அபாயகரமான சூழ்நிலையிலும் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் நீருக்கடியில் குப்பையில் சிக்கியுள்ள GPS கருவியைக் கண்டறிந்து நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கையளித்துள்ளனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles