NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹஜ் யாத்திரை – இலங்கையர் ஒருவரும் உயிரிழப்பு!

ஹஜ் யாத்திரைக்குச் சென்ற யாத்ரீகர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ஹஜ் யாத்திரை வந்த 550க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் இன்று அறிவித்தது.

கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சவூதி அரசாங்கம் கூறியுள்ளது.

உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் எனவும், துனிசிய குடிமக்கள் மற்றும் ஈரானிய நாட்டவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

Share:

Related Articles