NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹரோயின் மற்றும் கஞ்சாவுடன் 17 வயது சிறுவன் ஒருவர் கைது..!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர்  பெருமளவிலான ஹரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (06) கைது செய்து  ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  குறித்த முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையில் சம்பவதினமான இன்று பகல் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டபோது விசேட அதிரடிப்படையினரை கண்டு தனது உடமையில் மறைத்து வைத்திருந்த போதை பொருட்களை சிறுன் வீசியுள்ளான்.  

இதில் 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளும் பொதி செய்யப்பட்ட 650 மில்லிக்கிராம் கொண்ட 5 பக்கற் கேரளா கஞ்சாவும், 7 கிராம் 200 மில்லிக்கிராம் கேரளாககஞ்சாவை மீட்டதுடன் 17 வயது சிறுவனை கைது செய்து சான்று பொருட்களுடன்  ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share:

Related Articles