(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஹிக்கடுவ பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய 40 சிறுவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த ஹோட்டலை ஹிக்கடுவ பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டனர்.குறித்த சோதனையில், ஹோட்டலின் தண்ணீர் தொட்டி மாசுபட்டுள்ளமை தெரியவந்ததுள்ளது.
அதன்படி, குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் களுத்துறை பரிசோதகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த ஹோட்டலுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்குப்பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹிக்கடுவ நகரில் உள்ள பல முக்கிய ஹோட்டல்கள் பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டன.
உணவு மற்றும் குளிர்பானங்களை முறைகேடாக சேமித்து வைத்திருந்த 4 ஹோட்டல்கள் மீதும், ஹோட்டல்களில் அசுத்தம் ஏற்படுத்தியதற்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன்படி 5 ஹோட்டல்களுக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.