NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது.

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர், வவுனியா- ஒமந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓமந்தைப் பகுதியில் இளைஞர் ஒருவரை வழிமறித்து சோதனை செய்தனர்.இதன்போது இளைஞர் ஒருவரின் உடமையில் 6 கிராம் ஹெரோயின போதைப் பொருள் மீட்கப்பட்டது. இதனையடுத்து மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share:

Related Articles