(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஹைட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிச்டராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, நிலநடுக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, ஹைட்டி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சுமார் 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.