பாராளுமன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
அத்துடன், பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்றைக்குள் அகற்றப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சு.ஆ.யு.டு.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஊடகங்கள் வாயிலாக கட்டணம் செலுத்தப்பட்டட விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் தேர்தல் தினம் வரை அமைதி காலமாகும். வாக்காளர்கள் தமது வாக்கைப் பயன்படுத்துவதற்காக உரிய வகையில் விடுமுறையைப் பெற்றுக்கொடுக்குமாறு அரச மற்றும் தனியார் துறையினரிடம் கோரிக்கைவிடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் பிரசாரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை அகற்றிக் கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வேட்பாளர்களின் இல்லங்களில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும் எனவும், இல்லையேல் தேர்தல் சட்டத்துக்கு அமைய அவை அனைத்தும் அகற்றுவதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்படும் எனவும்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சு.ஆ.யு.டு.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.