இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தற்போது கூட்டுப்போர் பயிற்சி இடம்பெற்று வருகின்றது.
இதில் அவுஸ்திரேலியாவின் எம்.1 ஆப்ராம்ஸ் என்ற 5 போர் டாங்கிகள், இந்தோனேசியாவின் 2 லியோபர்ட் டாங்கிகள் என பல்வேறு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து இந்தோனேசிய இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜூலியஸ் விட்ஜோஜோனோ தெரிவிக்கையில்,
`ரோந்து பணியின் போது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதே இதன் முக்கிய நோக்கம்’ என தெரிவித்தார். ஆனால் இந்த கூட்டுப்போர் பயிற்சியை தனது நாட்டுக்கு அச்சுறுத்தலாக கருதி சீனா கடுமையாக எதிர்க்கின்றது. மேலும் தங்களது இராணுவ செல்வாக்கை கட்டுப்படுத்த நேட்டோவை போன்று ஒரு இந்தோ-பசிபிக் கூட்டணியை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்வதாகவும் சீனா குற்றச்சாட்டியுள்ளது.