அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, அமெரிக்காவின் டொனால்ட் யங்-டெய்லர் டவுன்செண்ட் ஜோடியுடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட் கணக்கில் வென்றதுடன், சம்பியன் பட்டத்தை வென்றது.