NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்பாறை, அறுகம்பே சுற்றுலா இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை!

அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பே பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து காரணமாக, மறு அறிவித்தல் வரை அருகம்பேவிற்கு அமெரிக்கத் தூதரகம் பயணத்தடை விதித்துள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளைக் கடுமையாகக் கேட்டுக் கொள்கின்றோம் எனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles