NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 30 வீதம் வாக்குப்பதிவு!

பாறுக் ஷிஹான்

திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான  9 ஆவது  ஜனாதிபதி  தேர்தல்  வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாகவும் மந்த கதியிலும் நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை  அம்பாறை மாவட்டத்தின் வாக்களிப்பானது 30 வீதமாக காணப்படுவதாக  மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான  சிந்தக அபேவிக்ரம   தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தில் 555,432  பேர் வாக்களிக்க தகுதி   பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528   வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள்  அரசியல் கட்சிகளாகவும்   பல சுயேட்சைகளாகவும்  களமிறங்கி உள்ளனர்.

இத்தேர்தலில் கல்முனை  தேர்தல் தொகுதியில் 82830   பேரும் சம்மாந்துறை  தேர்தல் தொகுதியில் 99,727  பேரும் பொத்துவில்  தேர்தல் தொகுதியில் 184,653  பேரும்  அம்பாறை   தேர்தல் தொகுதியில் 188,222 பேரும்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

 அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும்  தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும்  தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தினார்.

மேலும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பவ்ரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles