அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இந்த தொடரின் 3ஆவது போட்டி கடந்த 15ஆம் திகதி ராஜ்கோட்டில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி இந்தியா 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அயர்லாந்து அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீதம் அபராதம் விதித்து ICC உத்தரவிட்டுள்ளது.