NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அயோத்தி இராமர் சிலைக்கு 12 கிலோவில் தங்கப்பாதணிகள்!

அயோத்தி இராமர் சிலைக்கு பொருத்துவதற்காக தெலுங்கானாவில் இருந்து 2 தங்க பாத காலணிகள் 12 கிலோ 600 கிராம் எடையில் விசேடமாக தயார் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இடது பாத காலணியின் மேல் பகுதியில் கோமாதா, ஸ்வஸ்திக், கல்ப விருட்சம், யானை, அங்குசம், விஷ்ணுவின் மச்ச அவதாரம், தாமரைப்பூ மற்றும் 5 சின்ன பூக்கள் செதுக்கப்பட்டு உள்ளன. காலனி மோதிரத்தில் பச்சைக்கல் பொருத்தப்பட்டு உள்ளது.

வலது பாத காலணியின் மேல் பகுதியில் சங்கு சக்கரம், சூரியன், சந்திரன், அங்குசம், கல்ப விருட்சம், ஜண்டா, கலசம், மற்றும் பத்மம் செதுக்கப்பட்டு உள்ளது. காலணியின் உள்பகுதியில் பஞ்ச உலோகத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. 25 நாட்களாக 6 பேர் கொண்ட கலைஞர்கள் இந்த தங்க பாதத்தை தயார் செய்து உள்ளனர்.

குறித்த பாதிகள் சாஸ்திர சம்பிரதாயப்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எவ்வளவு நாட்கள் ஆனாலும் மெருகு குறையாமல் இருக்க பிருத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:

Related Articles