NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்தவும் அனுமதி அவசியம்..!

அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி இது தொடர்பில் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பார்வைக்கு இணங்க, பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதமரின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்தும் போது, பிரதமர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, அமைச்சர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் எனவும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles