NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச நிறுவன மின்னஞ்சல்கள் மீது சைபர் தாக்குதல் – CID விசாரணை

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத்தினால் முன்வைக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சைபர் தாக்குதலினால் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளின் தரவுகள் அழிவடைந்திருந்தன. 

சைபர் தாக்குதல் தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் நிறுவனம் மற்றும் இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பேரவை ஆகிவற்றிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles